முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 3 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உளுந்துார்பேட்டை தாலுகா கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா மனைவி சத்யா. இவரிடம் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த அருள்,45; என்பவர் பெட்ரோல் வாங்க ஸ்கூட்டி கேட்டார்.இதற்கு சத்யா மறுக்கவே அருள் தகராறு செய்து சென்றார். இதுகுறித்து சத்யா தனது உறவினர்கள் சிலம்பரசன்,40; கவியரசன்,35; செந்தில்,40; ஆகியோரிடம் கூறினார். ஆத்திரமடைந்த 3 பேரும், அருளை தேடி தாய் மாமன் ஏழுமலை வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். இதனை சமாதானம் செய்த ஏழுமலை தாய்மாமன் நாராயணசாமி, 70; என்பவரை குத்தி கொலை செய்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.