கள்ளக்குறிச்சி, மாடூர் டோல்கேட் அருகே உள்ள பஞ்சமுக மஞ்சள் வராஹி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக பஞ்சமி யாக பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி வராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, விநாயகர், முருகன், ஜல வராஹி, நவக்கிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.