மகா சிவராத்திரி கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகமாக உள்ளது.;

Update: 2025-02-18 09:17 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கால்நடை சந்தையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி நெருங்கி வரும் நிலையில் அதிகமான மக்கள் ஆடு கோழிகளை வாங்குவதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகாலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12,000-க்கும், 20 கிலோ எடை கொண்ட கிடா ரூ.23,000 என விற்பனை செய்யப்பட்டது.

Similar News