திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி உயர் நிலை பள்ளியில் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு சத்துணவு கூடம் மற்றும் உணவுகளை திடீர் ஆய்வு
திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி உயர் நிலை பள்ளியில் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு சத்துணவு கூடம் மற்றும் உணவுகளை திடீர் ஆய்வு;
திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் நகராட்சி உயர்நிலைப் பள்ளியை இயங்கி வருகிறது இங்கு துவக்கப்பள்ளியில் 272மாணவ மாணவிகளும் உயர்நிலைப் பள்ளியில் 194 மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர். இங்கே பெரும்பான்மையான மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகிறார்கள்.இந்த நிலையில் அந்தப் பள்ளியில் சத்துணவு கூடத்தையும் சத்துணவையும் தரமாக உள்ளதா என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திடீர் ஆய்வு செய்தார்.சமைத்து வைக்கப்பட்டிருந்த சாப்பாடு சாம்பார் ஆகியவற்றைசாப்பிட்டு பார்த்தார்.உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு எண்ணெய் ஆகிய பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சத்துணவு கூடத்தில் உள்ள பொருள்கள்போதுமானதாக உள்ளதா சமைக்க பயன்படும் பாத்திரங்கள் போதுமா வேறு ஏதாவது தேவை இருந்தால் உடனடியாக நகராட்சியில் தெரிவிக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கான உணவில் எந்தவித குறைபாடும் இருக்கக் கூடாது எனவும்சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்குஎடுத்து கூறினார். சாப்பிட்டபின் மாணவர்கள் கை கழுவும் இடம்,மற்றும் கழிவறைகள் தூய்மையாக உள்ளதா எனவும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது நகர் மன்ற உறுப்பினர் ராஜா, புவனேஸ்வரி உலகநாதன், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி பழனிவேல் துவக்கப்பள்ளி முருகேசன் ஆகியோர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.