அண்ணாண்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள கால்வாயில் மது போதையில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு*

அண்ணாண்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள கால்வாயில் மது போதையில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு*;

Update: 2025-02-19 12:11 GMT
திருப்பத்தூர் மாவட்டம் அண்ணாண்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள கால்வாயில் மது போதையில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜபார் மகன் மசார் அகமது (38) இவர் ஜோலார்பேட்டை அடுத்த அண்ணாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த நசீமா(37) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவருடைய மாமியார் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அண்ணான்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில் அந்த வழியாக வந்த சிலர் கால்வாயில் உடல் இருப்பதை தெரிந்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த போலீசார் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர் பின்னர் போலிசார் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Similar News