ராமநாதபுரம் ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டிஷியன் துவக்க விழா நடைபெற்றது
தனியார் மஹாலில் ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேஷன் துவக்க விழா நடைபெற்றது;
ராமநாதபுரத்தில் அழகுக்கலை நிபுணர்கள் (ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேஷன்) துவக்க விழா தனியார் மகாலில் நடந்தது. அதன் தலைவர் மினி, பொதுச்செயலாளர் அந்தோனி டேவிட் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகி அருணா வரவேற்றார். அருண், முத்துசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் தலைவராக கஜலட்சுமி, துணை தலைவராக பிரியா,செயலாளராக ஜெயமீனா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து அதன் தலைவர் மினி கூறுகையில், ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேஷன் சங்கீதா சவுகான் என்பவரால் 2011 ம் ஆண்டு புதுடெல்லியில் துவங்கப்பட்டது. முற்றிலும் அழகுக்கலை நிபுணர்கள் நலனுக்காக துவங்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 27 மாநிலங்களில் 1,27,000 பேர் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.