கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் ரத்தசோகையை கண்டறிவதற்கான மருத்துவ முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கீதா, மாணவிகளுக்கு ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கினார்.டாக்டர் ஜிலானி மாணவிகளுக்கு பல் பரிசோதனை செய்தார். ரத்தசோகை ஏற்படாமல் இருப்பதற்கான உணவு பழக்கம் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வலியுறுத்தினார். செவிலியர் ரம்யா, பகுதி சுகாதார செவிலியர் அந்தோணியம்மாள், ஆய்வக நிபுணர் ஜெயந்தி ஆகியோர் மாணவிகளின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். முகாம் பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், பாலா, மருந்தாளுனர்கள் மணிகண்டன், ராதா, உதவியாளர் கதிரவன் ஆகியோர் மேற்கொண்டனர்.