ஆட்சி மொழி பயிலரங்கம்

பயிலரங்கம்;

Update: 2025-02-20 03:35 GMT
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு அலுவலர்களுக்கான, 2 நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.முதல்நாள் கூட்டத்தில், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள், ஆட்சிமொழி ஆய்வு, குறை களைவு நடவடிக்கைகள், ஆட்சிமொழி வரலாறு-சட்டம், கணினித் தமிழ் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்தநாள் மொழிப்பெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம், ஆட்சிமொழிச் செயலாக்கம்-அரசாணைகள், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி செயலாக்கம் குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News