சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதிவேற்பு விழா

சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதிவேற்பு விழா;

Update: 2025-02-20 11:07 GMT
திருச்செங்கோடு சிட்டி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம் அதன் படி 2025 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரையிலான காலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவராக V.J. நல்லக்குமரனும், செயலாளராக S.P.பிரகாஷும், பொருளாளராக T தீபன் குமார் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தேர்வு செய்யப் பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள டால்பின் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தற்போதைய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் லோகநாதன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தின் ஆலோசனைக் குழு மற்றும் மையக் குழு நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ராஜா ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற நிர்வாகிகளுக்குசேலம் கரூர் பகுதிகளில் இயங்கி வரும் அரவிந்த் கணேஷ் செராமிக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுவாழ்த்தி பேசினார். தொடர்ந்து சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் பல்வேறு பொறியாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News