ராமநாதபுரம் விவசாயிக்கு அடி உதை
மணல் கடத்தலுக்கு எதிராக அதிகாரிகளிடம் புகார் அளித்த விவசாயியை காரில் கடத்தி அடித்து உதைத்ததில் விவசாயி முகத்தில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி ஐந்து பேர் மீது வழக்கு பதிவு போலீஸ் விசாரணை;
ராமநாதபுரம் சட்ட விரோத மணல் கடத்தலை தடுத்து நிறுத்தி மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கனிமவள அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்து வந்த விவசாயியை மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் காரில் கடத்தி அடித்து உதைத்ததில் முகத்தில் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த சாலை கிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த வடக்கு சாலை கிராமம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(36). இவர் சாலை கிராமத்தில் விவசாய பணி செய்து வருகிறார் இந்நிலையில் சாலைகிராமம் பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவர் தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயி ராதாகிருஷ்ணன் தடையானை பெற்றுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பாலுச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை கிராமம் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோதமாக அனுமதி இன்றி இரவு நேரல்களில் மணல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட கனிமவள அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்ததுடன், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார். இதனிடையே இன்று ராதாகிருஷ்ணன் சாலைகிராமம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்மு கொண்னு விட்டு தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை காரில் கடத்தி கடைமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த ராதாகிருஷ்ணனை ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அடுத்த காடருந்தகுடி என்ற இடத்தில் காரை விட்டு இறக்கி பின் காரில் கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களில் இருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் முகத்தில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக இளையான்குடி அடுத்த சாலை கிராமம் போலீசார் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலுசாமி ராஜசேகரன் ரவி கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.