ராமநாதபுரம் இது தரப்பினர் இடையே மோதல்

ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் 11 வது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநாட்டில் இரு தரப்பினர் இடையே மோதல்;

Update: 2025-02-21 14:51 GMT
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் 11 வது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநாட்டில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கட்டிப் புரண்டு சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் 11 வது மாநில மாநாடு பட்டினம் காத்தான் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. துவக்க நிகழ்வாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வந்து நிகழ்ச்சியை நேற்று துவக்கி வைத்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகளை வாக்களித்து தேர்வு செய்யப்பட வேண்டும் என ஒரு தரப்பும் முக்கிய நிர்வாகிகள் குழு நிர்வாகிகளை தேர்வு செய்யும் என மற்றொரு தரப்பும் மாறி மாறி வாக்குவாதம் செய்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நிதி வசூல் செய்ததில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடும் பண பங்கீட்டில் பிரச்சனையும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதனை அடுத்து மேடையிலேயே இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவனை அடுத்து சக நிர்வாகிகள் இரு தரப்பையும் சமாதானம் செய்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் வெளியில் வந்து ஆட்டம் போட்டும் எதிர் தரப்பினர் கோஷமிட்டும் தங்களது தரப்பு உணர்வை வெளிப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று துவக்கி வைத்து கடந்த இரண்டு நாட்களாக மாநாடு நடைபெற்று வந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News