ராமநாதபுரம் புதிய வகுப்பறை மாணவர்களுக்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்
புதுமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழக முதல்வர்கள் புதிய வகுப்பறைகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்;
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புது மடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை 63.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழக முதல்வர் இன்று (21-02-2025) காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் புதுமடம் அரசு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் சித் சிங் காலோன் மற்றும் , சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் புதுமடம் அரசு பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.