நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா, உயர்கல்வி பயில்வோருக்கு பாராட்டு விழா, தமிழ்கூடல் விழா, இலக்கிய மன்ற விழா, ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகமது சுல்தான், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈத் ஜும்மை ரஹிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் ரசீது கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளியில், பொது தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தீன் அறக்கட்டளை மற்றும் அப்துல் ஹை மைமூன் அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, பட்டதாரி தமிழ் ஆசிரியர் நசீரா வரவேற்றார். முடிவில், உதவி தலைமை ஆசிரியர் பூங்குழலி நன்றி கூறினார்.