தெற்குபொய்கைநல்லூர் செல்லியம்மன் ஆலயத்தில் விவசாயம் செழிக்க வேண்டி
12 மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற சிறப்பு மஹா சண்டி யாகம்;
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்ஆலயத்தில், சிறப்பு மஹா சண்டி யாகம் நேற்று நடைபெற்றது. கடந்த 17-ம். தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற யாகத்தின் நிறைவு நாளான நேற்று மஹா சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக அமைதிக்காகவும் மஹா சண்டி யாகம் நடைபெற்றது. ஆலயத்தில், ராட்சத குண்டம் அமைத்து, 108 மூலிகை பொருட்கள் மற்றும் 1 டன் அளவிலான காய்கள், பழங்கள், 12 மணி நேரம் இடைவிடாது மஹா சண்டி யாகம் நடைபெற்றது. நிறைவாக, பூர்ணாகுதியுடன் முடிவடைந்தது. பின்னர், ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார்கள் ஆலயத்தை வலம் வந்து செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.