கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே இன்று அறிக்கை வெளியீடு
கடலூர் அமைச்சர் எம்ஆர்கே இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.;
வருகின்ற 24.02.2025, திங்கள்கிழமை 11 மணி அளவில் குறிஞ்சிப்பாடி திமுக அலுவலகத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடைபெற உள்ளது. அதுசமயம் கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.