த வெ க ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி
த வெ க ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி;
தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு நகர- மற்றும் அணிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருச்செங்கோடு நகரத் தலைவர் நாகராஜ் தலைமையில் நாமக்கல் ரோடு மலை சுற்றி பாதை அருகில் மாவட்டச் செயலாளர் ஜெ. ஜெ.செந்தில்நாதன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் பின்னராக திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளில் வாகன ஊர்வலத்துடன் கொள்கை தலைவர்கள் கர்மவீரர் காமராஜர்,தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர சேலம் ரோடு கார்னர் ரமேஷ் மஹாலில் கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜே செந்தில்நாதன் அவர்கள் சிறப்புரையாற்றி ஆலோசனைகள் வழங்கினார் மாவட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டம், நகரம்,ஒன்றியம்,பேரூர் கிளை,இளைஞர் அணி.வர்த்தக அணி . வழக்கறிஞர் அணி.ல்,தொண்டரணி மாணவரணி, இணையதளஅணி மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்