சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் காவல் செயலி குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு

ரெயில்வே போலீசார் செயலி குறித்து செயல்விளக்கம் செய்து விழிப்புணர்வு;

Update: 2025-02-24 03:03 GMT
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக காவல் உதவி செயலியை பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் ஒன்றான சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. ெரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் ெரயில்வே போலீசார், காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து ெரயில் பயணிகள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ரெயில் நிலையத்தில் இருந்த பெண்கள், ரெயிலில் இருந்த பெண்களிடம் செல்போனில் காவல் உதவி செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது, பெண்களுக்கு எதிரானது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்கும் போது காவல் உதவி செயலியை எப்படி பயன்படுத்தி புகார் அளிப்பது உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஏராளமான பெண்கள் தங்களது செல்போன் எண்ணில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

Similar News