சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மோட்டூர் பழக்கார தோட்டம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மனைவி மைதிலி (வயது 40). இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இளம்பிள்ளை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது தாரமங்கலம், பகுதியை சேர்ந்த மாரியப்பன் (57) என்பவர், மைதிலி மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரித்த போது அவர், பல்வேறு இடங்களில் 21 மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.