லாரி மோதி விபத்தில் முதியவர் பலி

பலி;

Update: 2025-02-24 03:16 GMT
கச்சிராயபாளையம் அடுத்த கெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி 74; இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில் சின்னசேலம் நோக்கி பைக்கில் மடத்துக்காடு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன்; என்பவர் ஓட்டி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News