மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நிகழ்ச்சி;

Update: 2025-02-24 03:21 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மஞ்சப்பை பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி உதவி இயக்குநர் செந்தில் தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ராம்குமார், மாவட்ட பசுமை அலுவலர் பூபதிராஜா முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் கலா வரவேற்றார்.நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்து, மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடைகளில் பிளாஸ்டிக் 'கேரி பேக்'குகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கோவில்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

Similar News