பசுமை சாம்பியன் விருது

விருது;

Update: 2025-02-24 03:23 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் மாநில அளவில் மொத்தம்,100 பேருக்கு விருதும், தலா ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு விருது வழங்கப்படும்.கலெக்டர் தலைமையிலான குழுவினர் தகுதி வாய்ந்த, 3 தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை தேர்வு செய்வர். இதற்கான, விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் வரும், ஏப்., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News