குறைந்த கட்டணத்தில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திறப்பு
இன்று நான் மாவட்ட ஆட்சியராக உங்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக உதவி செய்த முதல்வருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்;
. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் முதல்வர் மருந்தகம் இன்று திறக்கப்பட்டது. தருமபுரம் சாலை குமரன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். தமிழக முதல்வர் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கும் நிகழ்ச்சி led திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பொதுமக்கள் பார்த்தனர். இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சென்ற ஆண்டு உடல் நல குறைவு ஏற்பட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது இதயத்தில் மூன்று அடைப்புகள் உள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியபோது தமிழக முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விபரம் கேட்டறிந்து உடனடியாக சென்னைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யாமல் அடைப்புகள் சரி செய்யப்பட்டது. இதயத்தில் அடைப்புகள் சரி செய்யப்பட்டு இதுவரை எந்த அதிகாரிகளும் மூன்று நாளில் பணிக்கு செல்லாத நிலையில் நான் மூன்று நாளில் பணிக்கு சென்றேன். தமிழக முதலமைச்சர் இல்லாவிட்டால் நான் மீண்டும் மாவட்ட ஆட்சியராக உங்கள் முன் இன்று இங்கு பேசிக் கொண்டிருக்க முடியாது. தமிழக முதலமைச்சர் செய்த உதவி என் வாழ்நாளில் மறக்க முடியாத உதவியாக உள்ளதால் என்றும் அவருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவிப்பதாக உருக்கமுடன் பேசினார்.