மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து

திருக்குவளையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-24 14:46 GMT
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, நாகை மாவட்டம் கீழையூர் மேற்கு ஒன்றிய திமுகவினர் நேற்று திருக்குவளை கடை தெருவில் கண்டன ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் சோ.பா.மலர்வண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்தியை திணிக்கும் பாஜக அரசைக் கண்டித்தும், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்காதே எனவும், தமிழகத்திற்கு சேர வேண்டிய கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், திமுக மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News