புதிய மின்மாற்றியை எம் எல் ஏ துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தால ஒன்றியம் கொடைவிளாகம் ஊராட்சியில் புதிய மின் மாறி தொடக்க விழா நடைபெற்றது.;
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு கொடைவிளாகம் ஊராட்சியில் ரூபாய் .6.5லட்சம் மதிப்பீட்டில் 64 கிலோ வோல்ட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், குத்தாலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.