அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து;
அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முட்புதர்கள் மற்றும் காய்ந்த இலைகள் மள மளவென தீ பற்றி எரிந்தது இது குறித்து அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.