சாக்கு குடோனில் பயங்கர தீ விபத்து

சாக்கு குடோனில் பயங்கர தீ விபத்து;

Update: 2025-02-25 06:19 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில்கொல்லப்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமான சாக்கு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்று நள்ளிரவு மூன்று மணி அளவில்திடீரென தீப்பிடித்து புகைமூட்டம் எழுந்துள்ளது இதனைத் தொடர்ந்து குடோரின் மேல் பகுதியில்ஓடுகள் வெடித்து சிதறியது.இன்று சந்தை நாள் என்பதால் அதிகாலையில் சந்தைக்கு வர தொடங்கிய வியாபாரிகள் இதனைப் பார்த்து பார்த்தனர் மேலும்அக்கம் பக்கத்தினர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும் குடோன் உரிமையாளரான பரமசிவத்திற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீக்கட்டுக் கடங்காமல் மளமளவென பரவியது. பரவிய தீயின் தாக்கம்அதிகமாக இருப்பதை அறிந்ததீயணைப்புத் துறையினர் திருச்செங்கோடு அருகே உள்ள வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் வாகனங்களை வரவழைத்தனர். திருச்செங்கோடு நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள சாக்குகள் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த குடோனில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும்கோழி தீவனம் நெல் கோதுமை மற்றும் தானியங்கள் ஏற்ற விற்பனை செய்யப்படுவதாகவும்,சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாக்கு குடோன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் குடோன் முழுவதும் எரிந்து நாசமானது இந்த தீ விபத்து சம்பவத்தில் சாக்குகள் எரிந்தது பல கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும் என கூறப்படுகிறது. திடீர் தீ விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்தும் நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். நள்ளிரவில் சாக்கு குடோன் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தில் வீடுகள் மற்றும் கடைகள் அதிகளவில் இருப்பதால் தீஅடுத்த பகுதிகளுக்கு பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பயங்கர தீபத்து சம்பவம் சந்தைப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாலை நேரத்தில் தீ பரவிய நிலையில் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்லூரியில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனமும் தண்ணீர் லாரிகளும் விவேகானந்தா கல்லூரியிலிருந்து தண்ணீர் வாகனங்களும் நகராட்சியில் இருந்து தண்ணீர் வாகனங்களும் வந்து பேர் உதவி செய்ததாகவும் நள்ளிரவு நேரத்திலும் பொது மக்களின் அழைப்பு ஏற்று உடனடியாகஉதவிக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்

Similar News