விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர

சிறப்பு முகாம் - 28-ம் தேதி கடைசி;

Update: 2025-02-25 11:40 GMT
நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியும் இணைந்து, பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அதன்படி, விபத்து காப்பீடு திட்டத்தை, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக, விபத்து காப்பீடு பதிவு வாரம் சிறப்பு முகாம் வருகிற 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தில், 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். முகாமிற்கு வரும்போது, ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரர்களின் விவரங்களை கொண்டு வர வேண்டும். ரூ.320 க்கு ரூ.5 லட்சமும், ரூ.559 -க்கு ரூ.10 லட்சமும், ரூ.799 - க்கு ரூ.15 லட்சமும் ஆகிய திட்டங்களில் இணையலாம். அஞ்சல் துறையும், இந்தியா போஸ்டல் பேமெண்ட்ஸ் வங்கியும், பொது துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி மற்றும் பல்வேறு தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன காப்பீடு மற்றும் உடல் உடல் நலத்திற்கான காப்பீடுகளை வழங்குகிறது. இத்திட்டங்களில் சேர, நாகை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால்காரர்கள் மூலமும் இத்திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அஞ்சலகங்களை அணுகவும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News