மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி
திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் எதிரில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, பேரூர் கழக செயலாளர் எம்.முகம்மது சுல்தான் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதிகள் த.குணசேகரன், கு.ஹமீது ஜெகபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கைவிட வலியுறுத்தியும், தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பிரதிநிதிகள், மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.