தமிழ் வழிக் கல்வியில் அசத்தும் வட மாநில மாணவர்கள்
தமிழ் வழிக் கல்வியில் அசத்தும் வட மாநில மாணவர்கள்;
திருவள்ளூர் தமிழ் வழிக் கல்வியில் அசத்தும் வட மாநில மாணவர்கள் இந்தி மொழியை படிப்பதை காட்டிலும் தமிழ் மொழியை கற்பதில் மன மகிழ்ச்சியாக உள்ளது என பேட்டி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் வல்லூர் அனல் மின் நிலையம் சிமெண்ட் தொழிற்சாலைகள் காட்டுப்பள்ளி எல்என்டி துறைமுகம் காமராஜர் துறைமுகம் சமையல் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஆகும் இங்கு கடந்த 35 ஆண்டுகளாக மேற்குவங்கம் உத்தரப்பிரதேசம் அசாம் பீகார் ஜார்கண்ட் ஒரிசா என பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அத்திப்பட்டு ரயில் நிலையம் மற்றும் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலைய பகுதியைச் சுற்றி வசித்து வருகின்றனர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் இங்கு உள்ள பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை கற்பதில் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர் தமிழ் மொழியில் அத்திப்பட்டு மற்றும் வல்லூர் அரசு பள்ளியிலும் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எளிமையாக கற்றுத் தருவதால் புரிந்துகொண்டு தங்களால் படிக்க முடிகிறது என்றும் இந்தி மொழி வீட்டில் பேசினாலும் பள்ளியில் சக தோழர்களுடன் ஆசிரியர்களுடன் தமிழை பேசி தமிழ் வழியில் கல்வி கற்பது எளிமையாக உள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் தற்பொழுது தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பல்வேறு வித போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அத்திப்பட்டு வல்லூர் நந்தியம்பாக்கம் மேலூர் சுற்றுவட்டாரங்களில் குடும்பங்களோடு தங்கி இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பீகார் அசாம் ஜார்க்கண்ட் உத்தர பிரதேசம் மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியிலேயே தங்களது கல்வியை பயின்று வருகின்றனர் தங்களுக்கு இந்தியை விட தமிழே எளிமையாக இருப்பதாக கூறுகின்றனர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி குஷி சிங் தான் பயின்ற பள்ளியில் தமிழில் 92 மதிப்பெண்கள் பெற்று மற்ற தமிழ் மாணவர்களை விட தான் பயின்ற அரசு பள்ளியில் முதலிடம் பிடித்து தற்பொழுது தன்னுடைய மேற்க கல்வியை மணலி புதுநகரில் உள்ள சகாய மாதா பள்ளியில் பயின்று வருகிறார் தங்கள் மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தங்களுடைய உறவினர்களது குழந்தைகள் பயின்று வருவதாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் போஜ்புரி மொழி இருந்தாலும் அவை பள்ளியில் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்று கூறுகின்றனர் அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் கல்வி பயில்வதற்கு இந்தி ஆங்கில ம் மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டாலும் கூடுதலாக அவர்கள் அரபி படிப்பதற்கு வாய்ப்பு தரப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர் இஸ்லாமியர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு இரு மொழிக் கொள்கைதான் அங்கு கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர் அத்திப்பட்டு வல்லூர் ஆகிய பள்ளிகளில் பயிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் தங்களுக்கு இந்தி மொழி தெரிந்திருந்தாலும் அதனை படிக்க வாய்ப்பு இருந்தும் அதில் ஆர்வம் காட்டாமல் தமிழ் மொழியின் எளிமை அவர்களை ஈர்த்துள்ளதால் மகிழ்ச்சியுடன் தமிழ் வழியில் படித்து வருவதாக தெரிவிக்கின்றனர் இந்தி மொழியை பயென்றால் வெளிமாநிலத்திற்கு மாற்றலாகி வேலை நிமித்தம் காரணமாய் செல்லும் பொழுது பயனளிக்கும் என்றும் இருப்பினும் தமிழ்நாட்டில் படிக்கும் தங்களுக்கு தமிழ் மொழியால் நல்ல கல்வி கிடைக்கிறது என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர்.