திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டம் சார்பில்
இயற்கை விற்பனை சந்தை;
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களின் இயற்கை சந்தை விற்பனை நடைபெற்றது. இதில், காய்கறி வகைகள், கீரை வகைகள், பழ வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள், காளான் சூப், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இதர வேளாண்மை சார்ந்த பொருட்கள் விற்பனையில் இடம் பெற்றது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கினர். விற்பனையில், உதவி திட்ட அலுவலர்கள் இந்திராணி, சந்திரசேகர், சரவணன், வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி, வட்டார வள பயிற்றுநர் சுகந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகா, லதா, இந்துஜா, அண்ணாதுரை மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர், சமுதாய வள பயிற்றுநர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.