மயூரநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் நாட்டியாஞ்சலி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 3ஆம் நாள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூர், மயிலாடுதுறை மாவட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு:-  ;

Update: 2025-02-26 13:33 GMT
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக 19 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 23ஆம் தேதி துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சென்னை , கோயம்புத்தூர் , பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த நாட்டியக் கலைஞர்கள் பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றினர். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மேலும் கோயம்புத்தூரை சேர்ந்த அப்யாசா அகாடமி ஆப் கிளாசிக்கல் டான்ஸ் மற்றும் பெங்களூரை சேர்ந்த மனோஜ்னா நிருத்ய கலா அகாடமியை  சேர்ந்த மாணவிகள் அரங்கேற்றிய பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Similar News