தக்கோலத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்!
மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்!;
மகா சிவராத்திரி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தக்கோலத்தில் அமைந்துள்ள கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை கோயிலில் ஜலநாதீஸ்வரருக்கு இன்று பால் தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜலநாதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஜலநாதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.