நடிகை விஜயலெட்சுமியிடம் பெங்களூரில் வைத்து சீமான மீதான புகாரில் விசாரணை

நடிகை விஜயலெட்சுமியிடம் பெங்களூரில் வைத்து சீமான மீதான புகாரில் விசாரணை;

Update: 2025-02-26 15:36 GMT
நடிகை விஜயலெட்சுமியிடம் பெங்களூரில் வைத்து விசாரணை; சீமான மீதான புகாரில் விசாரணை கடந்த 2011 ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கருக்கலைப்பு செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்றது. உயர்நீதிமன்றம் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான விசாரணையை துரிதப்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் வருகிற 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் அளித்தனர். இந்த நிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி அவர்களிடம் வளசரவாக்கம் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கை நீதிமன்றம் விரைவுப்படுத்த உத்தரவிட்டிருக்கும் நிலையில் விஜயலட்சுமியிடம் முதற்கட்டமாக இன்று விசாரணை நடத்தினர்.

Similar News