மகா சிவராத்திரி விழாவையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவில்
நேற்று இரவு விடிய விடிய சிறப்பு பூஜை;
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழாவின் போது சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கும். நடப்பாண்டு மகா சிவராத்திரி விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இவ்விழாவை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு எட்டு மணிக்கு ஒன்றாம் கால பூஜை அபிஷேகம், தங்க கவசம் சாத்துப்படி, இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அபிஷேகம் புஷ்ப அலங்காரமும், நள்ளிரவு 1:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை அபிஷேகம் தாழம்ப சாத்து படியும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை அபிஷேக சந்தன காப்பா அலங்காரம் நடந்தது. விழாவையொட்டி நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை வரை பாரம்பரிய கலை, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமயம் சார்ந்த சொற்பொழிவுகளும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.