இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயற்சி
போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம்;
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ரெயில் மறியலை கைவிட்டு அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் 500-க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டனர்.