சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்
அமைச்சர் ராஜேந்திரன் தகவல்;
சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்டம் முழுவதும் ஆண்களுக்கான கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3-ந் தேதி ஓமலூர் பேரூர், 4-ந் தேதி காடையாம்பட்டி மேற்கு ஒன்றியம், ஓமலூர் வடக்கு ஒன்றியம், அழகாபுரம் பகுதி, 5-ந் தேதி சூரமங்கலம் பகுதி, தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம், 7-ந் தேதி அம்மாபேட்டை பகுதி, செவ்வாய்பேட்டை பகுதி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், 8-ந் தேதி குமாரசாமிப்பட்டி பகுதி, குகை பகுதி, 9-ந் தேதி காடையாம்பட்டி பேரூர், ஓமலூர் தெற்கு ஒன்றியம், சேலம் வடக்கு ஒன்றியம், கன்னங்குறிச்சி பேரூர், 14-ந் தேதி கொண்டலாம்பட்டி பகுதி, 15-ந் தேதி அரிசிபாளையம் பகுதி, 16-ந் தேதி கருப்பூர் பேரூர், பொன்னம்மாபேட்டை பகுதி, 20-ந் தேதி அஸ்தம்பட்டி பகுதி, மெய்யனூர் பகுதி, 22-ந் தேதி கிச்சிப்பாளையம் பகுதி, தாதகாப்பட்டி பகுதி, 23-ந் தேதி ஓமலூர் கிழக்கு ஒன்றியம் ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. இதில் கட்சியின் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.