சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் தொட்டாச்சாரியார் உற்சவம்
நரசிம்மர் கோவிலில் தொட்டாச்சாரியார் உற்சவம்;
சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில் தொட்டாச்சாரியார் உற்சவம் நடைபெற்றது. இதன் நிறைவு நாளை முன் னிட்டு பக்தோசிப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி, தொட்டாச்சாரியார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி தனித்தனி கேடயத்தில் எழுந்தருளி 4 மாட விதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் வீடுகள்தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர். 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.