நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு

சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்;

Update: 2025-02-27 09:06 GMT
நாகை அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் திருக்கோயிலில், மகா சிவராத்திரி சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ காயாரோகண, நீலாயதாட்சி அம்மன், நந்தி பகவான் சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், திருநீர், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் மற்றும் பூஜை செய்யப்பட்ட கலச புனித நீர் ஊற்றி சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம், மலர் மாலை அணிவிக்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருநாகை நாட்டியாஞ்சலி 25 -ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், சென்னை, பெங்களூர், மும்பை ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இரவு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைக் குழுவினர் பரதநாட்டியம் ஆடி, இறைவனுக்கு புகழஞ்சலி செலுத்தினர், கலை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

Similar News