அரக்கோணத்தில் எம்.ஆர்.எப் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
எம்.ஆர்.எப் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இச்சிப்புத்தூரில் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு, நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று உணவு வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடத்தில் தொழிற்சாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.