தலைஞாயிறு பேரூராட்சி துணை தலைவரை பணி நீக்கம் செய்ய

பேரூராட்சி செயல் அலுவலரிடம் மன்ற தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கோரிக்கை மனு;

Update: 2025-02-28 07:23 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி 15 உறுப்பினர்களை கொண்டுள்ளது. தலைஞாயிறு பேரூராட்சியில், பேரூராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த செந்தமிழ்செல்வி பிச்சையன் உள்ளார். துணை தலைவராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கதிரவன் உள்ளார். பேரூராட்சி உறுப்பினர்களில், மன்ற தலைவர் உட்பட 7 அதிமுகவினரும், 7 திமுகவினரும் உள்ளனர். இந்நிலையில், துணை தலைவர் கதிரவன், பேரூராட்சி தீர்மானங்களை நிறைவேற்ற விடாமலும், பொதுமக்கள் சார்ந்த அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து தடுத்தும், பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையிலும், பேரூராட்சியில் நிர்வாக சீர்கேடு ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படும், பிஜேபியை சேர்ந்த கதிரவனை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர கோரி, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமியிடம், பேரூராட்சி மன்ற தலைவர் உள்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர் அனைவரும் இணைந்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News