கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் விவேகானந்தா கேந்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மாலையில் படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். பின்னர் படகு மூலம் கரைக்கு வந்த அவர் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.