விரிவாக்கப்பட்ட ரயில்வே பாலம் குமரி எம்.பி ஆய்வு 

ஆரல்வாய்மொழி;

Update: 2025-02-28 11:56 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரெயில்வே சிறிய பாலம் அமைந்து இருந்தது. இரட்டை ரயில் பாதை பணிக்காக பாலம் அகற்றி புதிய பாலம் கட்டித்தரப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறியிருந்தனர்.         ரயில்வே மேல்பகுதியில் சிறிய பாலத்தை   இடித்து புதிய பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பால பணி முடிவடைந்து உள்ளது           இந்நிலையில் இந்த புதிய பாலத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று 28-ம் தேதி நேரில்  சென்று ஆய்வு செய்தார் பின்னர் ரயில்வே துறை அதிகாரியிடம் பாலத்தின் தன்மை குறித்தும் கேட்டறிந்தார்.       இதில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் உதயம், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், வட்டார தலைவர் முருகானந்தம், வர்த்தக காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார்  உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News