ராணிப்பேட்டையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு;
ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு கிராமத்தில் இன்று நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரங்களை வழங்கி, கை கால்களில் தேமல் இருந்து அது நாள்பட்டதாக இருப்பின் கிள்ளினாலும் வலி இல்லாமல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தினர்.