ராணிப்பேட்டை மாவட்டம் தென்நந்தியாளம் கிராமத்தில் CMC செவிலியர் கல்லூரி சமூக நலத்துறை, அறிவுடைமை வளர்ப்பு ஆற்றல் இயக்கம், அனைத்து அறச்செயல் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர்.