ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற ஊழியரின் இறப்புக்கு காரணமான நீதிபதி மீது

துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-28 14:27 GMT
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், மாற்றுப்பணியில் பணிபுரிந்த அருண் மாரிமுத்து அகால மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், அருண் மாரிமுத்து மீது பணி ரீதியாக தொடர்ந்து தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்து மனரீதியாக அவரை பாதிப்படையச் செய்து, அவரது இறப்பிற்கு காரணமான நீதிபதி அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது குற்ற மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதித்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு வழங்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தினை வலியுறுத்தி, மாநில மையத்தின் முடிவின் அடிப்படையில், நாகை மாவட்ட தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றங்கள் முன் நேற்று மாவட்டத் தலைவர் கே.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் விளக்கவுரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன், மாவட்ட பொருளாளர் ப.அந்துவன்சேரல், வட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் மற்றும் நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.சண்முகம் நன்றி கூறினார்.

Similar News