சமையல் செய்தபோது தீயில் கருகிய வடமாநில தொழிலாளி பலி

சமையல் செய்தபோது தீயில் கருகிய வடமாநில தொழிலாளி சாவு;

Update: 2025-03-01 04:43 GMT
ஜார்க்கண்ட் மாநிலம், கம்லா மாவட்டம், சிட்டாகுட்டு கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரா (வயது 24). இவரது மனைவி சீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கஜேந் திராமைத்துனர் தானு. நண்பர் லகானோ. இவர்கள் அனைவ ரும் வாலாஜாவை அடுத்த படியம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 13-ந் தேதி சமைப்பதற்காக தானு கியாஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது அவர் மீது தீப்பிடித்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News