மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்த மதீஸ்வரன், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த மேடை நடன கலைஞர் பிரியா என்பவரை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தெற்கு வெங்காநல்லூரில் இருவரும் வாழ்ந்த போது, அவர்களுக்கு சைனோஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. 2017 ம் வருடம் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தந்தையுடன் இருந்த குழந்தையைக் கேட்டு தாய் பிரியா கணவருடன் சண்டையிட்டதுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அறிந்த கணவர் ஊருக்கு திரும்பி செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த தனது மனைவியிடம் சமரசம் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரியாவை கை, தோள் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், மதீஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கினார்.