சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காட்டை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 48), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சோனி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிைலயில் மீண்டும் கர்ப்பமான சோனிக்கு கடந்த 18-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வலியால் மனைவி படும் கஷ்டத்தை பார்த்து ரங்கராஜ் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ரங்கராஜ் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.