தேசிய அறிவியல் தினம்

சேலம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி;

Update: 2025-03-01 09:36 GMT
சேலத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கொண்டப்பநாயக்கன்பட்டி அரசுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அந்தோணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தேவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கேப்ரியல் வரவேற்றார். இதில், டார்வின் அறிவியல் கழக மாநில தலைவர் பாலசுப்ரமணியம், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எளிய அறிவியல் பரிசோதனைகள் சார்ந்து 200க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர். முன்னதாக, அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனை கவுரவிக்கும் வகையில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரது மாஸ்க் அணிந்துகொண்டு வரவேற்றனர். இதில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் சண்முகபிரியா, பூபதி, லால் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News