திமுக சார்பில்  தமிழக முதல்வர் பிறந்த தின விழா

கருங்கல்;

Update: 2025-03-01 10:24 GMT
குமரி மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கருங்கல் அருகே பாலூர் சந்திப்பில் தமிழக முதல்வர் பிறந்த தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமை வகித்தார். நிர்வாகிகள்  துரைராஜ், பாலூர் தேவா, தங்கத்துரை, பேரூர் கழகச் செயலாளர்கள் சத்யராஜ், எஸ் எம் கான், மனோஜ்  முன்னிலை வகித்தனர்.        தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழ்நாட்டு நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்கும் எதற்கும் விட்டுத் தர மாட்டோம்,  தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம்,  தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், இதுதான் ஒரே இலக்கு என்று கட்சியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.        இந்த நிகழ்ச்சியில் கிளைக் கழகச் செயலாளர்கள் செல்வராஜ், ஜனா, வலம்புரி ஜான், பைஜூ, மரிய டான்ஸ்,  வேலாயுதம், வினிஸ், சைன், ராஜ ஸ்டீபன், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News